புலம்பெயர் மக்களிடம் சிறிநேசன் முன்வைக்கும் கோரிக்கை
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எதிர்கொண்டுள்ள அனர்த்த நிலமை குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து சிறிநேசன், புலம்பெயர் மக்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
வெள்ள அனர்த்த நிலமைகள் காரணமாக பல பிரதான வீதிகள் வெள்ளத்தினால் மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துக்களும், தடைப்பட்டுள்ளன.
இந்நிலையில் மாவட்டத்தின் தாழ் நிலங்களில் மக்கள் எதிர்கொண்டுள்ள வெள்ள அனர்த்த நிலமைகள் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் நேரில் சென்று நிலமைக்களை அவதானித்துள்ளார்.
சீரற்ற காலநிலை
மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட பல விடயங்கள் பாதிப்புக்குள்ளாகும் நிலமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கு அரசின் இயந்திரம் துரிதமாக செய்யப்பட்டு மக்களுக்கு ஆற்ற வேண்டிய செயல்களை மேற்கொள்ள வேண்டும். நாங்களும் பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர் மற்றும் அனர்த்த முகமை அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு அவ்வப்போது மாவட்டத்தின் நிலைமைகளை தெரிவித்து வருகின்றோம்.
அதுமாத்திரமின்றி மனிதாபிமான சிந்தனை உள்ளவர்கள், புலம்பெயர்ந்து வாழ்கின்ற உறவுகள், பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு உதவிகளை செய்வதற்கு முன்வர வேண்டும் என நான் கோரிக்கை விடுக்கின்றேன் என சிறிநேசன் கோரிக்கை ஒன்றையும் இதன்போது விடுத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
தவெக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தாலும்..! 10 தொகுதிகளின் நிலவரம் - இறுதி முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்