கருத்து வெளியிடுகின்றவர்களை பிடிக்காவிட்டால் அழிக்கும் செயற்பாடு: கடந்த காலத்தை நினைவுப்படுத்தும் சிறிநேசன் எம்.பி
கடந்த காலத்தில் அரகலய போராட்டம் ஒன்று நாட்டிலே இடம்பெற்று இருந்தது, அதன் மூலமாக ஆட்சி மாற்றத்திற்குரிய அடித்தளம் போடப்பட்டிருந்தது, அதற்கு இந்த சமூக ஊடகங்களே பங்களிப்புச் செய்திருந்தன என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
ஆனால் கருத்து வெளியிடுகின்றவர்களை பிடிக்காவிட்டால் அவர்களை அழிக்கின்ற செயற்பாடு கடந்த காலத்தில் இடம்பெற்றிருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு, ஜனநாயக மதிப்புகள் தொடர்புடைய சிக்கல்கள் தொடர்பான விழிப்புணர்வு உருவாக்கும் திட்டம் மட்டக்களப்பு - கல்லடி தனியார் விடுதியில் நேற்று முன் தினம் (04.10.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கருத்து வெளியிட்டதால் கொல்லப்பட்டவர்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், இதுவரையில் இந்த நாட்டிலே 45 ஊடகவியலாளர்கள் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டமைக்காக உயிரை கொடுத்திருக்கின்றார்கள். அதில் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் கிட்டத்தட்ட 28 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள், சந்திரிகாவின் ஆட்சி காலத்தில் சுமார் 14 ஊடகவியலாளர்களும் ஜே.ஆர்.ஜெயவர்த்தன மற்றும் பிரேமதாசவின் ஆட்சிக் காலங்களிலும் ஊடகவியலாளர்கள் இவ்வாறு கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
இந்த நிலையில் நிகழ்லை காப்பு சட்டத்தை நாங்கள் எடுத்து பார்க்கின்ற போது சில மட்டுபாடுகள், கட்டுப்பாடுகள், இருக்கத்தான் வேண்டும். சில விமர்சனங்களை பார்க்கின்ற போது நூற்றுக்கு நூறு வீதம் பொய்யானவையாகவும் இருக்கின்றன.
மோசமான கருத்துக்கள்
சிலர் வெளியிடுகின்ற கருத்துக்களுக்கும் உண்மை தன்மைக்கும் எந்தவித தொடர்புகளும் இருக்கமாட்டாது. அந்த சந்தர்ப்பத்தில் நாம் பார்க்கின்றோம் இந்த சமூக ஊடகங்கள் மிகவும் மோசமான கருத்துக்களை பரப்புகின்றன என்பது பற்றி நாம் யோசிக்கின்றோம். மறுப்புரம் மிகவும் அறிவியல் ரீதியாக விமர்சிக்கின்ற சமூக ஊடகங்களும் இருக்கின்றன.
அவை மிகவும் நாகரிகமான முறையில் தமது விமர்சனங்களை செய்து கொண்டிருக்கின்றன. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும்கூட இந்த சமூக ஊடகங்கள் பெரும் பங்களிப்பு செய்திருக்கின்றன. மோசமான ஆட்சி நாட்டை வங்ரோத்து நிலைக்கு கொண்டு சென்ற ஆட்சியை மாற்றி அமைப்பதற்கு சமூக ஊடகங்கள் பங்களிப்பு செய்திருந்தன என குறிப்பிட்டுள்ளார்.





பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri
