தமிழ் மக்களுக்கு தேவையான விடயங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுப்போம் - சிறிநாத்
நல்ல விடயங்களை பாராட்டுவதோடு தமிழ் மக்களுக்கு தேவையான விடயங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநாத் தெரிவித்துள்ளார்.
அதற்கு இன மத பேதம் இன்றி நாம் எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என அவர் கூறியுள்ளார்.
மட்டக்களப்பில் அமைந்துள் அவரது காரியாலயத்தில் நேற்று (11.11.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வரவு செலவுத் திட்டத்திலும் நாங்கள் பல விடயங்களை ஆதரித்தாலும்கூட தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்ற இந்த அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் மக்களுக்கான நீதி, தமிழ் மக்களுக்கான மொழி பாதுகாப்பு நிலம் சம்பந்தப்பட்ட உறுதிப்பாடுகள் இல்லாத பட்சத்தில் அதற்கு எவ்வாறு ஆதரவளிக்கின்றது என்கின்றதொரு வினா எழும்புகின்றது.
வரவு செலவுத் திட்டம்
ஆகவே நாம் நிதானமாக வரவு செலவுத் திட்டம் சம்பந்தமாக ஒரு தீர்மானத்தை வாக்கெடுப்பு முன் எடுப்போம். இதிலுள்ள நல்ல விடயங்களை பாராட்டுவதோடு தமிழ் மக்களுக்கு தேவையான விடயங்களுக்கு தொடர்ந்துகுரல் கொடுப்போம்.
ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலே சில செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கான சாத்தியங்கள் காணப்பட்டிருக்கின்றன. இந்த வேலை திட்டங்களை நாங்கள் நாடாளுமன்ற குழு கூட்டங்களில் முன்வைத்திருந்தோம்.

அதற்காக வேண்டி நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். விசேடமாக முந்தானை ஆறு திட்டத்திற்கு 50 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது பாரியளவு வெள்ளப்பெருக்கு தடுக்கப்படும், மேலும் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு வரப்பிரசாதமாகவும் இது அமையும், அதுபோல் கிரான் பாலம் பொண்டுற்சேனை பாலம் போன்ற பாலங்களும் மிகப்பெரிய வெள்ள அனர்த்தங்கள் ஏற்படுத்துவதற்குரிய காரணங்களாக அமைந்திருக்கின்றன.
இந்த பாலங்கள் அமைப்பதற்காக வேண்டியும் 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறன. அதற்காக நாங்கள் வரவேற்கின்றோம்.
கல்வித்துறையை பொறுத்தளவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரி ஆளனிப் பற்றாக் குறைகள் காணப்படுகின்றன. இதற்குரிய திட்ட முன்மொழிவுகளை நாங்கள் முன்மொழிந்திருக்கின்றோம்.
முன்னுரிமை
ஆனாலும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான தீர்வு காண்பதற்கு உறுதிப்படுத்தப்பட்ட முடிவுகளைக் காணவில்லை. ஆளணியை நாடு பூராவும் பூர்த்தி செய்வதற்குரிய முன்மொழிவுகள் சொல்லப்பட்டிருந்தாலும் கூட மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுமா என்பது தெரியாது.
கைத்தொழித்துறை, சுற்றுலாத்துறை, போன்றனவற்றினூடாகவும், வடகிழக்கில் அபிவிருத்தி திட்டங்கள் கொண்டு செல்லப்படும் என்பதற்கான உறுதிப்பாடுகளும் பெரியளவில் தெரியாதுள்ளது. இவ்வாறு கடந்த காலங்களிலும் சொல்லப்பட்டிருந்தும் பல விடயங்கள் நிறைவேற்றப்படாமல் இருந்திருக்கின்றன.
எனவே இந்த அரசாங்கம் வரவு செலவு திட்டத்தின் ஊடாக ஒரு கவர்ச்சிகரமாக மக்களுக்கான திட்டங்களை உள்வாங்கி இருக்கின்றன. வரி குறைப்பு, வரியை நிலைப்படுத்துகின்ற சந்தர்ப்பங்கள், நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை, கடனைமீளச் செலுத்துகின்ற விடயம் இருப்பை பேணுதல், போன்ற பல விடயங்களை இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக முன்வழியப்பட்டிருக்கின்றன.
ஆனாலும் மிகப் பிரதானமாக உற்பத்தி துறையை பெருக்குவதற்கு அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பெரியளவு கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றதா? என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக நாங்கள் எதிர்பார்ப்பது வடகிழக்கு மக்கள் கடந்த யுத்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் யுத்தம் மௌனிக்கப்பட்டு 16 ஆண்டுகள் கழிந்தும், பாரியளவு கட்டுமானங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை.
நாட்டின் மொத்த வளர்ச்சியில் பெரிய அளவில் கொண்டு வருவதற்குரிய செயறிட்டம் கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்கள் இதய சுத்தியுடன் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. அரசாங்கம் வடகிழக்கில் வினைத்திறனான கட்டுமான பணிகளையும், அபிவிருத்தி திட்டங்களையும், முன்னெடுப்பதற்கும் இன்னும் பாரியளவு ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam