தென்னிலங்கை அரசியலில் தமிழ் மக்களுக்கு உரிமைகளை இல்லாமல் செய்ய திட்டம் தீட்டுகின்றார்கள் - சிறிநாத் எம்.பி கண்டனம்
தென்னிலங்கை தேசிய அரசியலில் தமிழ் மக்களுக்கு உரிமைகளை இல்லாமல் செய்வதற்காக பல சதித்திட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் நிகழ்கால பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகள் தொடர்பான மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு தமிழர் பண்பாட்டு உணர்வாளர்கள் அமைப்பினால் வி.ஆர்.மகேந்திரனின் தலைமையில் நேற்று (28.02.2026) மட்டக்களப்பு திருப்பழுகாமம் வெள்ளிமலை பண்பாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
சதித்திட்டங்கள்
இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர், "அவர்களின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எந்த கட்சிகளும் விதிவிலக்கல்ல.

கடந்த காலங்களில் இருந்த கட்சிகளும் நிகழ்காலத்தில் இருந்த இருக்கின்ற கட்சிகளும் எதிர் காலத்தில் தென்னிலங்கையை ஆட்சி செய்யப் போகின்ற கட்சிகளுக்கும் ஒரு நிகழ்ச்சி நிரல்தான் இருக்கின்றன.
தமிழ் தேசிய பரப்பினை இல்லாமல் செய்து தமிழ் மக்களின் இனவிகிதாசாரத்தை மாற்றி அமைப்பதன் மூலம் தமிழ் மக்களை மேலும் சிறுபான்மையினர் ஆக்கிக் கொண்டு அவர்களுடைய அரசியல் உரிமைகளில் இருந்து சகல உரிமை விடயங்களையும் இல்லாமல் செய்வதுதான் அவர்களுடைய நிகழ்ச்சி நிரலாகும்.
இதற்கு எந்த சிங்கள பௌத்த தேசிய வாதம் விதிவிலக்கல்ல. என்பதை நாம் உணர்ந்திருக்க வேண்டும். அதில் நாங்கள் அனுபவமும் பட்டிருக்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கை சூழ்ந்துள்ள போர் மேகம் இந்தியாவையும் ஆக்கிரமிக்கும் அபாயம் - நாடு முழுவதும் பறந்த உத்தரவு
தீவிரமடையும் நிலைமை: டுபாய் - அபுதாபியில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகை - வெளியானது அறிவிப்பு