உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கிடைக்க வேண்டும் - வைத்தியர் சிறிநாத்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதுடன் அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் வைத்தியர் சிறிநாத் தெரிவித்துள்ளார்.
வைத்தியர் சிறிநாத் இன்று (14.10.2024) மதத்தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்ட போதே இதனைக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“வன்முறைகள் அற்ற, ஊழல் அற்ற தமிழ் தேசியத்தினை பாதுகாத்து நிற்கின்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பாக நான் தேர்தலில் களமிறங்கியுள்ளேன். கடந்த காலத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி
புதிய அரசாங்கம் உறுதிமொழிகளை வழங்கியுள்ள போதிலும் இதுவரை அவற்றை நிறைவேற்றவில்லை. இது தொடர்பில் ஆயருடன் கலந்துரையாடியிருந்தேன். எமது பயணம், வன்முறைகள் மற்றும் ஊழல்களுக்கு முற்றாக எதிராக இருக்கும்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும், நிவாரணம் கிடைக்கவேண்டும்.
இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாகவுள்ளோம்.
இவ்வாறான செயற்பாடுகளுக்கு நீதிகோரிய போராட்டங்களை தொடர்ச்சியாக
தமிழரசுக்கட்சி முன்னெடுக்கும் அதற்கு பக்கபலமாக தமிழ் மக்கள் இருக்கவேண்டும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 22 நிமிடங்கள் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
