குழந்தைகளின் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
உயர்தரப் பரீட்சை நாளை (23) ஆரம்பமாகவுள்ள நிலையில் மின்சாரத்தை துண்டித்து குழந்தைகளின் உயிருடன் விளையாட வேண்டாம் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து மின்சார சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று தெரிவித்துள்ளார்.
பரீட்சைகளின் போது மின்சாரத்தை துண்டிப்பது தகுந்த நேரம் கிடையாது.மின்சாரத்தின் தேவை குறைந்துள்ளதால், குழந்தைகளின் வாழ்க்கையோடு விளையாடவோ அல்லது பொருளாதாரத்துடன் விளையாடவோ இது நல்ல நேரம் அல்ல.
தேவையான மின்சாரத்திறனில் 95 சதவீதத்தை நீர் மின்சாரம், நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்கவை மூலம் வழங்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பரீட்சையின் போது மின்சாரம் வழங்குவதற்கு எரிபொருளை கொள்வனவு செய்ய 500 கோடி ரூபா செலவிடப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கூறியது பொய்யானது.

விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
மின்துறை மற்றும் மின்சாரத்துறை பற்றி அறியாத அமைச்சரை பதவியில் இருந்து நீக்குமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அறிவுள்ள ஒரு அமைச்சரை நியமித்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கிடையில் கலந்துரையாடல்களை நடத்தி, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி வரை உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் நாட்டு மக்கள் அனைவரும் மின் பாவனையை மேலும் குறைக்க வேண்டும்.
இச்சமயத்தில் பிற்பகல் 3.00 மணிக்குள் மின்சாரத்தை துண்டித்து எதிர்கால சந்ததியினருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மற்றும் பரீட்சை காலத்தில் இரவு 7.00 மணிக்கு பின்னர் மின்சார சபையின் செயற்பாட்டினை ஏற்கமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 17 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri