கடுமையான நிலைப்பாட்டில் இலங்கை! அலி சப்ரியின் இரகசிய குறிப்பிற்கு அமைச்சரவை அங்கீகாரம்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 2021 மார்ச் அமர்வில், “நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்” என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை மீது நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானம் 46/1 தொடர்பாக கடுமையானதும், உறுதியானதுமான முடிவிலேயே அரசாங்கம் தொடர்ந்தும் இருக்குமென அறியவருகிறது.
கடந்த வருட அமர்வில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டிருந்த 46/1 தீர்மானத்தின் குற்றம் குறைகளில் முன்னேற்றத்தை, அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள 51ஆவது அமர்வில் மீளாய்வு செய்ய ஐ.நா. மனித உரிமைகள் பேரவை திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கடந்த வாரம் அமைச்சரவைக்கு இரகசியக் குறிப்பொன்றை சமர்ப்பித்திருந்தார்.
2021 மார்ச்சில் ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வில் உள்ளீர்த்துக் கொள்ளப்பட்ட எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான சாத்தியமான உபாயங்களை உருவாக்குவதற்கும், வெளியில் இருந்து ஆதாரங்களை சேகரிப்பதற்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தடையின்றி முழுமையாக முயற்சிப்பதை இலங்கை தொடர்ந்து நிராகரிக்கும் என்பதை உறுதிப்படுத்துமென்ற அக்குறிப்பிற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவலுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,