இலங்கையில் குத்தகைக்கு வாங்கப்படும் எயார்லைன்ஸ் விமானங்கள் : ஹர்சா டி சில்வா வெளியிட்ட தகவல் (PHOTOS)
இலங்கையில் 40க்கும் மேற்பட்ட விமானங்களை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குத்தகைக்கு பெற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நகைச்சுவையான விடயமாக உள்ளது. இலங்கை திவாலாகியுள்ளது. எரிபொருள், எரிவாயு மற்றும் மருந்துகள் இல்லை. இந்த முட்டாள்தனத்திற்கு பணம் எங்கே? இவ்விடயம் தொடர்பில் உடனடியாக தெளிவுபடுத்துவது நல்லது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் அவர் தனது ட்வீட்டர் பதிவில் கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் flag carrier SriLankan Airlines நிறுவனமானது பெரிய விமானம்,
உள்ளடங்களாக பிராந்திய ஜெட் விமானங்கள், சிறிய ரக விமானங்கள் மற்றும் பெரிய ரக
விமானங்கள் என 40க்கும் மேற்பட்ட விமானங்களை குத்தகைக்கு எடுக்க உள்ளது என உத்தியோகபூர்வ @flysrilankan
இணையத்தளத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது.
This must be a joke?! But it is in what seems official @flysrilankan website. Airline sources say going to lease 40 aircraft?! #SriLanka is bankrupt; no fuel, gas or medicine. Where the hell is money for this nonsense?! Better immediately clarify. https://t.co/6xnrIghOMR. pic.twitter.com/OZuCfz4b6I
— Harsha de Silva (@HarshadeSilvaMP) April 14, 2022