இலங்கை யுவதிகளுக்கு ஜப்பானில் கிடைத்த கௌரவம்
ஜப்பானில் தாதியர் சேவை துறையில் பணியாற்றும் இலங்கை யுவதிகள் இருவர் ஜப்பானில் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
ஜப்பானில் தாதியர் சேவை துறையில் தொழில்நுட்ப சேவை பயிலுனர்களாக கடமையாற்றும் இரண்டு இலங்கை யுவதிகள் நாட்டின் முன்னணி சஞ்சிகையான 'வித் ஐஎம்' சாகரவின் அட்டைப்படத்திற்கு தெரிவு செய்யப்பட்டு அவர்களின் பணியை பாராட்டி கடிதம் ஒன்றை வெளியிட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த யுவதிகள், நிறுவனத்தில் உள்ள அனைவரின் அன்பையும் பெற்றிருப்பதுடன், அவர்களின் உயர் ஜப்பானிய மொழித்திறன் மற்றும் வசீகரமான புன்னகை காரணமாக, அவர்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெரியவர்கள் மற்றும் ஜப்பானியர்களின் அன்பும், கருணையும் பெற்றுள்ளமையினால் இவர்களுக்கு இந்த பாராட்டு கிடைத்துள்ளது.
இலங்கை பயிற்சியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் தயக்கம்
ஹலவத்தாவில் வசிக்கும் காவிந்த்யா சித்துமினி மற்றும் காலியில் வசிக்கும் அஷினி நிமேஷா ஆகியோர் 2021 இல் தாதியர் பயிற்சியாளர்களாக ஜப்பானுக்குச் சென்றுள்ளனர்.
இவர்கள் ஜப்பானின் நாகசாகியில் உள்ள 'லைஃப் டிசைன்' நிறுவனத்தால் நடத்தப்படும் தாதியர் சேவை மையத்தில் செவிலியர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
'லைஃப் டிசைன்' நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கட்சுயா, இலங்கை யுவதிகள் குறித்து கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை பயிற்சியாளர்களை நிறுவனத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதில் தயக்கம் காட்டப்படுகின்றது. இந்த இளம் பெண்களின் செயல்களின் அடிப்படையில், அவர்கள் மீது வலுவான நம்பிக்கை.
எதிர்காலத்தில் இலங்கை பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அதிக பங்களிப்பை வழங்குவதற்கு நிறுவனம் நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.