அபுதாபியில் லொத்தர் சீட்டிலுப்பில் 15 மில்லியன் ஜாக்பொட் பரிசை வென்ற இலங்கையர்
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பு ஒன்றில் இலங்கையர் ஒருவர் 15 மில்லியன் ஐக்கிய அரபு இராச்சிய திர்ஹம் வெற்றி பெற்றுள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற பிக் டிக்கட் என்னும் லொத்தர் சீட்டிலுப்பில் குறித்த இலங்கையர் இவ்வாறு 15 மில்லியன் திர்ஹம் வெற்றியீட்டியுள்ளார்.
213288 என்னும் இலக்கமுடைய லொத்தர் சீட்டிற்கு இந்த ஜாக்பொட் பரிசு கிடைக்கப்பெற்றது.
கடந்த மாதம் நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பிலும் இலங்கையர் ஒருவர் முதல் பரிசு வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையைச் சேர்ந்த ரசிக்க ஜே.டி.எஸ் என்ற நபரே இவ்வாறு முதல் பரிசினை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நண்பர்களுடன் வெளியே சென்றிருந்த வேளையில் லொத்தர் சீட்டிலுப்பு ஏற்பாட்டுக்குழுவினர் இந்த வெற்றி குறித்த விபரங்களை தொலைபேசி மூலம் ரசிக்கவிற்கு அறிவித்துள்ளனர்.
ரசிக்க டுபாயில் பொறியியலாளராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri