இலங்கை தொலைக்காட்சி அலைவரிசைகள் ஒழுங்கற்றவை: விசாரணையில் கசிந்த உண்மை
இலங்கையில் தொலைக்காட்சி அலைவரிசைகளின் தரமுறை, ஒழுங்கற்றதும் பாரபட்சமுமானது என நாடாளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற பொதுக் கணக்குகளுக்கான குழு அமர்வின்போது, வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட இதனைத் தெரிவித்துள்ளார் மேலும் அவர் தெரிவிக்கையில்,
தவறான தரவு
தரமதிப்பீட்டைக் கணக்கிடும் தரவுகளைச் சேகரிக்கும் நோக்கத்திற்காக தோராயமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 400 தொலைக்காட்சிப் பெட்டிகளில் ஒரு சாதனம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மூன்று முக்கிய ஊடக நிறுவனங்கள் இந்த சாதனங்கள் பொருத்தப்பட்ட சுமார் 300 தொலைக்காட்சிப் பெட்டிகளை பணம் கொடுத்து கொள்வனவு செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே சேகரிக்கப்பட்ட தரவு தவறானது என தெரவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |