ரணிலிடம் தமிழர்கள் தீர்வை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்: அநுரகுமார திசாநாயக்க கருத்து
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அரசியல் தீர்வை எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது என்று தேசிய மக்கள் சக்தியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திசாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
இந்திய விஜயத்துக்கு முன்னர் தமிழ்க் கட்சிகளின் எம்.பிக்களுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடத்திய சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினர்.
அவர் மேலும் கருத்துரைக்கையில், தான் ரணில் ராஜபக்ச அல்ல ரணில் விக்ரமசிங்கதான் என்று தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஜனாதிபதி கூறியது நகைப்புக்குரியது.
தீர்வை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்
தற்போது ரணில் - ராஜபக்ச அரசுதான் ஆட்சியில் உள்ளது.
ராஜபக்சக்கள் பட்டாளத்தின் ஆட்சியில் தான் ஜனாதிபதி கதிரையில் ரணில் இருக்கின்றார்.
எனவே, ராஜபக்சக்களின் குணாதிசயங்கள் ரணிலிடம் உண்டு.
அவரிடம் தமிழ் மக்கள் - அவர்களின் பிரதிநிதிகள் தீர்வை எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
