ரணிலை கைவிடுகிறதா மொட்டு கட்சி! பசில் அளித்துள்ள வாக்குறுதி - செய்திகளின் தொகுப்பு
அடுத்த ஜனாதிபதி தேர்தலின் போது மொட்டு கட்சி வேட்பாளர் ஒருவரை களமிறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சி செயற்பாட்டாளர்களிடம் பசில் ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச கட்சி தலைமையகத்தில் கடந்த வாரம் முதல் தொடர் சந்திப்புகளை நடத்திவருகின்றார்.
தொகுதி அமைப்பாளர்கள், முன்னாள் உள்ளாட்சி மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் சந்திப்பில் பங்கேற்று வருகின்றனர்.
சமகால அரசியல் மற்றும் கட்சியின் எதிர்கால நகர்வுகள் தொடர்பில் கட்சி செயற்பாட்டாளர்களின் ஆலோசனைகளும், கருத்துகளும் கோரப்படுவதுடன், எவ்வாறு செயற்பட வேண்டும் என இதன்போது ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகின்றது என தெரியவருகின்றது.
மொட்டு கட்சிக்கு ஜனாதிபதி தரப்பில் கவனிப்பு எதுவும் இல்லை, அமைச்சு பதவி கூட வழங்குவதில் இழுத்தடிப்பு தொடர்கின்றது என உள்ளக்குமுறல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோல அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு மொட்டு கட்சி ஆதரவு வழங்கவுள்ள விவகாரம் தொடர்பிலும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அவ்வேளையிலேயே மொட்டு கட்சி உறுப்பினர் ஒருவரே வேட்பாளராக களமிறக்கப்படுவார்
என்ற உத்தரவாதத்தை பசில் ராஜபக்ச வழங்கியுள்ளார் என தெரியவருகின்றது.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |