போர்க்குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும்: தமிழ் குழுக்கள்
போர்க்குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை அதிகாரிகள் மீதான ஒட்டாவாவின் பொருளாதாரத் தடைகளை, புலம்பெயர் தமிழ் குழுக்கள் பாராட்டுவதாக கனேடிய செய்தித்தளமொன்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் போர்க்குற்றங்களுக்காக இலங்கை அதிகாரிகளை சர்வதேச தீர்ப்பாயங்களில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் தமிழ்க் குழுக்கள், கனடாவிடம் கோரியுள்ளன.
உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்காக இந்த மாத ஆரம்பத்தில் ஒட்டாவா, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் மற்றும் படைத்தரப்பினர் இருவருக்கும் தடைகளை விதித்துள்ளது. இதன்மூலம் கனடா முன்மாதிரியை காட்டியுள்ளது.

புலம்பெயர் தமிழ்க் குழுக்களின் கோரிக்கை
இந்த நிலையில் தடைவிதிக்கப்பட்டவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு
அழைத்து வருவதற்கான செயற்திட்டத்தை கனடா முன்னெடுக்க வேண்டும் என புலம்பெயர்
தமிழ்க் குழுக்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சொந்த உழைப்பில் பிரம்மாண்ட வீடு கட்டியுள்ள தொகுப்பாளினி மணிமேகலை... House Warming புகைப்படங்கள் Cineulagam
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan
ட்ரம்பின் அந்த முடிவு... நடுங்க வைக்கும் எச்சரிக்கை விடுத்துள்ள சீனாவின் நாஸ்ட்ராடாமஸ் News Lankasri