இந்திய கடற்றொழிலாளர்களை தாக்கிய கடற்படை: எழுந்துள்ள குற்றச்சாட்டு
இந்திய கடற்றொழிலாளர்கள் கச்சத்தீவு அருகே கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக ஒலி பெருக்கி மூலம் எச்சரித்துள்ளனர்.
அத்துடன் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களை நோக்கி கற்களை கொண்டு வீசி விரட்டியதாக கடற்றொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று (20.09.2023) சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்றொழிலாளர்கள் கைது நடவடிக்கைக்கு அஞ்சி நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர்.
கடற்றொழிலாளர்களை தாக்கிய கடற்படை
இதையடுத்து இன்று (21.09.2023) காலை கடற்றொழிலாளர்கள் தனுஷ்கோடி அருகே கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடற்றொழிலாளர்களை நோக்கி கற்களை கொண்டு வீசி விரட்டியுள்ளனர்.
மேலும் விசைப்படகில் இருந்த கடற்றொழிலாளர்களை தாக்கிய இலங்கை கடற்படை கடற்றொழில் வலைகளை வெட்டி கடலில் வீசியதாக கரை திரும்பிய கடற்றொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால் நடுக்கடலில் கடற்றொழிலாளர்கள் மீன் பிடிக்க விடாமல் இலங்கை கடற்படை தொடர்ந்து விரட்டியதால் கடற்றொழிலாளர்கள் மீன் பிடிக்க முடியாமல் படகு ஒன்றுக்கு சுமார் 70 ஆயிரம் வரை நட்டத்துடன் கடற்றொழிலாளர்கள் கரை திரும்பியுள்ளனர்.
நட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



