பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கைது
இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தில் 10 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை கட்டாருக்கு கொண்டு செல்ல முயன்ற இலங்கை பிரஜை ஒருவர் விமான நிலைய பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தோஹா செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் பயணிகளின் பயணப்பொதிகளை பரிசோதித்த போது இந்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் பேரில் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சந்தேகநபரின் பையில் இருந்து 10.294 கிலோ ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடத்தலில் ஈடுபட்ட ஏனைய நபர்கள்
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அந்நாட்டின் போதைப்பொருள் தடுப்புப் படையிடம் (ANF) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்ட ஏனைய நபர்களின் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |