லெபனானில் உள்ள இலங்கையர் தூதரகத்தில் தஞ்சம்
லெபனான் மீதான இஸ்ரேலின் வான் மற்றும் தரைவழி அகோரத் தாக்குதலை அடு்த்து அங்குள்ள இலங்கையர்கள் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் தஞ்சமடையத் தொடங்கியுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களுக்குள் 32 பேர் வரையான இலங்கையர்கள் அவ்வாறு தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் அந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று வௌிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலியத் தாக்குதல்
எனினும் இஸ்ரேலியத் தாக்குதல் காரணமாக லெபனானில் உள்ள எந்தவொரு இலங்கையரும் இதுவரை எதுவித பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்றும் அங்குள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
லெபனானில் உள்ள இலங்கையர்களை அங்குள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பைப் பேணிக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ள இலங்கையின் வௌிநாட்டலுவல்கள் அமைச்சு, அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் தொடர்ந்தும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |