சுவிஸில் மனைவியை கொலை செய்த ஈழத்தமிழருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு
சுவிட்சர்லாந்தில் மனைவியை கொலை செய்த ஈழத்தமிழரான கணவனுக்கு 17 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதி லென்ஸ்பர்க் மாவட்டத்திற்குட்பட்ட ரூப்பர்ஸ்வில் பகுதியிலுள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றில் மனைவியை கொலை செய்த இலங்கையர் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களான தமிழ் கணவனும் மனைவியும், ஒன்றாக அந்த சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றி வந்தனர்.
வாய்த்தர்க்கம்
சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று தம்பதிக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், 47 வயதுடையை மனைவியை, கணவன் கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்தார்.
கணவன் கைது செய்யப்பட்டு தற்போது வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணை லென்ஸ்பர்க் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், அவருக்கு தண்டனை அறிவிக்கப்படவுள்ளது. எனினும் இறுதி வழக்கு ஆரம்பிக்கும் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)