வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்கள்: வெளியான அறிவிப்பு
சுகாதார பணியாளர்கள் அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த அடையாள வேலைநிறுத்தமானது எதிர்வரும் 3ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார பணியாளர்கள் ஊடகங்களுக்கு தகவல் வழங்குவதை தடுக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுற்றறிக்கையை இரத்துச் செய்யாமைக்கு எதிராகவே குறித்த வேலைநிறுத்தம் இடம்பெறவுள்ளது.
சுகாதார செயலாளரால் மேற்கொள்ளப்படும் முறைகேடு தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என இதன் பொது தெரிவிக்கப்பட்டுள்ளது
சுகாதார அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
சுகாதார திணைக்களத்தின் பிரதானிகளின் அனுமதியின்றி ஊடகங்களுக்கு தகவல்களை வெளியிடவோ அல்லது வழங்கவோ முடியாது என சுகாதார சேவையை சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் சுகாதார அமைச்சினால் சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திணைக்களத்தின் பிரதானியின் அனுமதியின்றி ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கும் அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தவினால் கையொப்பமிடப்பட்ட குறித்த சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
சுற்றறிக்கை தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் இதுவரை பதிலளிக்கவில்லை என சுகாதார நிபுணர்கள் சங்கம் தலைவர் ரவி குமுதேஷ் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
