இலங்கை கடற்றொழிலாளர் படகு இந்தியாவில் தடுத்துவைப்பு
இந்திய கடல் எல்லையை தாண்டிய குற்றத்துக்காக இலங்கைப் படகு ஒன்று, இந்திய கடலோர பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
'அமுல் புத்தா' என்றே படகே நேற்றையதினம் (23.05.2023) தமிழ் நாடு, கன்னியாகுமரி அருகே 5 கடற்றொழிலாளர்களுடன் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்று (23.05.2023) தருவிளாகம் கடல்சார் பொலிஸ் நிலையத்தில் படகு மற்றும் பணியாளர்கள் கைளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கைப்பற்றல்
கடந்த சில மாதங்களில், தமிழகத்தைச் சேர்ந்த பல கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களது இயந்திர படகுகளையும் பறிமுதல் செய்த சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
இந்த நிலையிலேயே இலங்கை கடற்றொழிலாளர்களின் படகும் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |