யாழில் கடற்றொழிலாளர்களால் இந்திய துணைத் தூதுவரிடம் மகஜர் கையளிப்பு (Photos)

Indian fishermen Jaffna Narendra Modi India Sri Lanka Fisherman
By Kajinthan Sep 15, 2023 02:05 AM GMT
Report

யாழ்ப்பாண கடற்றொழிலாளர் சங்கங்கள் மற்றும் சமாசங்கள் ஆகியன ஒன்றிணைந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மகஜர் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர்..

குறித்த மகஜர் இன்றையதினம் (15.09.2023) யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகத்தில், துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

காணி விடுவிப்பு தொடர்பில் யாழ். வலி வடக்கு மக்கள் விசனம் (Photos)

காணி விடுவிப்பு தொடர்பில் யாழ். வலி வடக்கு மக்கள் விசனம் (Photos)

இலங்கை - இந்திய கடற்றொழிலாளர் பிரச்சனை

இலங்கையின் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களிற்கும் இந்திய கடற்றொழிலாளர்களிற்கும் இடையிலே இழுவைப் படகினால் கடல் வளமும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் பிரச்சனை நீண்டகாலமாக தொடர்ந்த வண்ணமே உள்ளது.

யாழில் கடற்றொழிலாளர்களால் இந்திய துணைத் தூதுவரிடம் மகஜர் கையளிப்பு (Photos) | Srilankan Fishermen Sent Letter To Narendra Modi

தாங்கள் பதவியேற்ற பின்பு 2016 ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி டில்லியில் இரு நாட்டின் வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் இராஜதந்திரப் பேச்சுக்கள் இடம்பெற்று ஓர் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

அதை இரு நாட்டு கடற்றொழிலாளர் சமூகமும் ஏற்றுக்கொண்டு அதன் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

யாழ். கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

யாழ். கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

தற்போது இரு நாட்டு அரசுகளும் இப் பேச்சின் போது எட்டப்பட்ட தீர்மானங்களை முன்கொண்டு செல்ல வடக்கு கடற்றொழிலாளர் சமூகம் தங்களை வேண்டி நிற்கின்றது.

தற்போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இலங்கை, இந்திய கடற்றொழிலாளர் பிரச்சனை அரசியலாக்கப்பட்டு அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் கடற்றொழிலாளர் என்ற பெயரிலும் கூட்டுறவு ஜனநாயக கட்டமைப்புக்களை செயலிலக்க வைத்து அதன் ஊடாக அரசியல் கட்சி ஓன்றின் பிரதிநிதிகளும் அதன் ஆதாரவாளர்களும் இணைந்து உண்மையான கடற்றொழிலாளர் பிரதிநிதிகளை ஓரம்கட்டும் செயல்பாடு அரசியல் கட்சியினால் முன்னெடுக்கப்படுகின்றது.

யாழில் கடற்றொழிலாளர்களால் இந்திய துணைத் தூதுவரிடம் மகஜர் கையளிப்பு (Photos) | Srilankan Fishermen Sent Letter To Narendra Modi

இழுவைமடித் தொழில்

குறிப்பாக இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் தான் சார்ந்த ஈ.பி.டி.பி கட்சியினரை மட்டுமே உள்வாங்கிச் செயல்பட்டு சங்கங்களை உருவாக்கி வருகின்றார். தற்போது இரு நாட்டு கடற்றொழிலாளர்  பிரச்சனையும் பேச்சுவார்த்தைகள் என்ற ரீதியிலே பேசுபொருளாக உள்ளது.

யாழ். முச்சக்கர வண்டிகள் தொடர்பில் டக்ளஸ் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை (Photos)

யாழ். முச்சக்கர வண்டிகள் தொடர்பில் டக்ளஸ் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை (Photos)

ஆகையால் 2016 ஆம் ஆண்டு எட்டப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் 2016 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தையில் பங்குகொண்ட பிரதிநிதிகளை இணைத்து தீர்வு எட்டப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதோடு தற்போது உள்ள கட்சி ஆதாரவாளர்களைக் கொண்டுள்ள அமைப்புக்களுடன் கலந்துரையாடுவதனையோ அவர்கள் கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் எனக் கூறுவதனையோ இதன் கீழ் கையொப்பமிடும் சங்கங்கள் சமாசங்கள் விருப்பவில்லை எனபதனையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

தற்போது இருநாட்டு தொப்புள்கொடி உறவுக்கு தடையாக இருக்கும் இழுவைமடித் தொழிலை இலங்கை கடற்பரப்பிற்குள் நிறுத்தி இருநாட்டு தமிழ் கடற்றொழிலாளர்களும் ஒற்றுமையுடனும், சகோதரத்துடனும் வாழ்வாதரத்தை நடாத்த ஆவண செய்வீர்கள் என நம்புகின்றோம்  என்றுள்ளது.

யாழில் கடற்றொழிலாளர்களால் இந்திய துணைத் தூதுவரிடம் மகஜர் கையளிப்பு (Photos) | Srilankan Fishermen Sent Letter To Narendra Modi

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US