குவைத்தில் உயிரிழந்த இளைஞரின் மரணத்தில் குழப்பம்: உறவினர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை
குவைத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறியுமாறு உறவினர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீகிரிய, இலுக்வல பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதான டபிள்யூ. ஜி. தனுஜக சந்தருவன் பண்டார என்ற திருமணமாகாத இளைஞன் குவைத்திற்கு தொழிலுக்காக சென்றிருந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் குவைத்தில் உள்ள வீடொன்றுக்கு சாரதியாக வேலைக்குச் சென்றுள்ளார்.
உறவினர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை
இந்நிலையில், உயிரிழந்த சந்தருவானின் சகோதரியான ஷஷினி மல்சானிக்கு, கடந்த 20 ஆம் திகதி தனது சகோதரர் வாகன விபத்தில் காயமடைந்துள்ளதாக அவர் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் சந்தருவானின் மரணம் தொடர்பிலான விசாரணையின் போது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக அவர் பணிபுரிந்த வீட்டு உரிமையாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் களஞ்சிய அறையொன்றில் அவர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கும் சிறிய காணொளி ஒன்று வாட்ஸ் அப் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மரணத்தில் சந்தேகம்
இந்நிலையில், உயிரிழந்த இளைஞரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சந்தருவானுக்கு பிரச்சினை இல்லாத காரணத்தால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், மரணத்திற்கான காரணத்தை கண்டறியுமாறு உறவினர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, சந்தருவானின் தாயாரும் குவைத்தின் வேறொரு பகுதிக்கு வீட்டு வேலைக்காக சென்றுள்ளதாகவும் அவரும் இன்று (28) அதிகாலை இலங்கை திரும்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
