ராஜபக்சர்களின் கட்சியுடன் இனிமேல் கூட்டணி அமைக்கவே மாட்டோம்: விமல் வீரவன்ச
கோட்டாபய ராஜபக்சவின் தன்னிச்சையான முடிவுகளும், தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுமே ஜனாதிபதி பதவியிலிருந்து விரட்டப்பட்டமைக்குப் பிரதான காரணம் என முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது தெரடர்பில் மேலும் கூறுகையில்,
கூட்டணி இல்லை
கோட்டாபய மக்கள் வழங்கிய ஆணைக்குச் சிறிதளவும் மதிப்புக் கொடுக்காமல் தான்தோன்றித்தனமாகவே செயற்பட்டார்.
அவரின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை நான் தட்டிக் கேட்டபடியால் எனது அமைச்சுப் பதவியும் பறிபோனது.
கோட்டாபயவின் இப்படியான செயற்பாடுகள் இறுதியில் ராஜபக்ச குடும்பத்துக்கே தலைக்குனிவை ஏற்படுத்தியது மட்டுமன்றி, ஒட்டுமொத்த ராஜபக்சக்களும் பதவிகளிலிருந்து விரட்டப்படக் காரணமானது.
எனவே ராஜபக்சக்களின் கட்சியுடன் இனிமேல் கூட்டணி அமைக்கவே மாட்டோம் என தெரிவித்தார்.





பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
