அம்பானியின் மகன் திருமண விழாவில் இலங்கை சமையல் கலைஞர்கள்
இந்திய தொழிலதிபர் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவிற்கு உணவு தயாரிப்பதற்காக இலங்கையில் இருந்து தேர்வு செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட 13 சமையல் கலைஞர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
குறித்த சமையல் கலைஞர்கள் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் வழியாக நேற்று (07.03.2024) காலை நாடு திரும்பியுள்ளனர்.
13 சமையல் கலைஞர்கள்
வாடிக்கையாளர் கருத்து தெரிவிக்கையில்,
”கூகுள் மதிப்புரைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த சமையல்காரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த 13 சமையல் கலைஞர்களும் தங்களது உணவகங்களில் இலங்கை உணவுகளை தயாரித்து வழங்கியுனர்.
இந்நிலையில் குறித்த சமையல் கலைஞர்களுக்கு மார்ச் 3 அன்று திருமணத்தில் கலந்துகொள்ளும் அழைப்பாளர்களுக்கு மதிய உணவு தயாரிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் தயாரித்த உணவுக்காக கிடைத்த பாராட்டுக்களின் அடிப்படையில், அவர்கள் மார்ச் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் இரவு உணவுகளையும் சமைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
மேலும், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள "ஜாம்" நகரில் உள்ள அம்பானிக்கு சொந்தமான தனியார் உயிரியல் பூங்காவில் இந்த திருமண விழா நடைபெற்றது.
குறித்த திருமண விழாவிற்கு இலங்கை சமையல் கலைஞர்கள் தவிர இங்கிலாந்து, துபாய், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சமையல் கலைஞர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
