இலங்கையில் அழியும் நிலையில் பறவை இனங்கள்
இலங்கையில் காணப்படுகின்ற 81 பறவை இனங்கள் அழியும் அபாயத்தில் உள்ளதாக இலங்கையின் உயிர்பல்வகைமை செயலக பணிப்பாளர் சீன ஊடகம் சின்ஹுவாவிற்கு தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியாக 244 வகையான பறவைகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு பெற்றுக் கொள்ளப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள உயிர்பல்வகைமை செயலகத்தின் பணிப்பாளர் ஆர்.எச்.எம்.பி. அபேகோன் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
சிவப்பு தரவு புத்தகம் என்பது அழிந்து வரும் மற்றும் அரிய வகை தாவரங்கள் விலங்குகளை பதிவு செய்யும் பொது ஆவணத்தின் தரவுகளின் படி இது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அபேகோன் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
உயிர்பல்வகைமை
இலங்கை 435 வகையான பறவையினங்களைக் கொண்ட உயிர்பல்வகைமை பெருக்கத்தின் முக்கிய இடமாக காணப்படுகின்றது.
மனிதர்களால் சுற்றுச்சூழல் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் மற்றும் பறவைகளின் வாழ்விடங்களை சேதப்படுத்துவதால் பறவைகள் அழியும் அபாயத்தை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் அழிவடையும் நிலையிலுள்ள பறவை இனங்களை பாதுகாப்பதை முழு சமூகமும் பொறுப்பேற்க வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
