வெளிநாடொன்றில் பல நாடுகளுக்கு மத்தியில் இலங்கை தூதுவருக்கு மட்டும் கிடைத்த அனுபவம்
பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி சானக ஹர்ஷ தல்பஹேவா, பிலிப்பைன்ஸின் சுற்றுலா துறை செயலாளருடன், பிலிப்பைன்ஸில் டைவிங் அனுபவத்தில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இந்த நிகழ்வு, டைவிங் மற்றும் கடல் பல்லுயிர் ஆய்வுக்கான முதன்மையான உலகளாவிய இடமாக நாட்டின் நிலையை வலுப்படுத்த பிலிப்பைன்ஸ் சுற்றுலாத் துறையின் முன்முயற்சியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாய்ப்பு
இந்நிகழ்வில், தென் கொரியா, பங்களாதேஷ், இந்தியா, மலேசியா, நியூசிலாந்து, இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, சீனா, பிரான்ஸ், இந்தோனேஷியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தூதரகங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இருப்பினும் இலங்கை தூதுவர் மட்டுமே டைவ்வில் பங்கேற்று அந்த அனுபவத்தை பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
