சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியீடு
தேசிய விமான சேவை நிறுவனமான சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் கீழ் அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் கடமைகள் மற்றும் செயல்பாடுகளை கோடிட்டுக் காட்டும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் 2025 நவம்பர் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சிறிலங்கன் எயார்லைன்ஸ்
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிடுவது என்ற அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு இணங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த வருடம் ஒக்டோபர் மாதம், சிறிலங்கன் விமான சேவையை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட்டு, அதிக இலாபகரமான எதிர்காலத்திற்காக அதனை மறுசீரமைக்குமாறு ஜனாதிபதி அனுநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
    
    
    
    
    
    
    
    
    
    திடீரென பழனிவேல் செய்த காரியம், கண்ணீர்விட்டு அழுத கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan