ஸ்ரீலங்கன் விமான அதிகாரிகளிடையே அடிதடி மோதல் - நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை
பேங்கொக்கின் சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில், விமான நிறுவன அதிகாரிக்கும் விமானப் பணியாளர்களுக்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் மோதல் தொடர்பான தவறான மற்றும் திசைதிருப்பும் ஊடகச் செய்திகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெளிவுபடுத்தியுள்ளது.
இதனை தெளிவுப்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அறிக்கைக்கமைய, ஏப்ரல் 2ஆம் திகதியன்று பேங்கொக்கில் உள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பணியாளர்கள் பணிக்கு தயாராகிக் கொண்டிருந்தபோது, இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஸ்ரீலங்கனின் இலங்கை முகாமையாளர்
ஸ்ரீலங்கனின் இலங்கை முகாமையாளர், பயணிகள் பதிவுப் பகுதிக்குள் நுழைந்து, விமானத்தை இயக்கும் பணியாளர்கள் மற்றும் நிலைய முகாமையாளருடன் கைகலப்பில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் உடனடியாக சுவர்ணபூமி சர்வதேச விமான நிலைய பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டது எனவும் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை முகாமையாளர் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை, தேவையற்றவை மற்றும் நிறுவனத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மீறியவை என்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.
அவர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, இலங்கைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார் என நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan