10 நிமிடங்களில் 10 லட்சம் ரூபாயை இழந்த ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகள் நேற்று பத்து நிமிடங்களுக்குள் ஒரு மில்லியன் ரூபாவை இழந்துள்ளனர்.
இரண்டு வாரங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் நேரத்திற்கு வேலை என்ற தொழிற்சங்க நடவடிக்கையினால் இந்த இழப்பை சந்தித்துள்ளனர்.
நேற்று காலை 9.00 மணியளவில் பாகிஸ்தானின் கராச்சி நகருக்குப் புறப்படவிருந்த விமானத்தில் 3025 கிலோ கிராம் பெறுமதியான வெற்றிலை பொதியை கொண்டு செல்வதனை நிராகரித்தமையினால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை விமானிகள் சங்கத்தில் சுமார் 180 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் நிலையில், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு கொடுப்பனவில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
எந்தவொரு விமானமும் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் தாமதமாக பயணிக்கலாம் என்ற நிலையில் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இந்த வெற்றிலை பொதியை எடுத்து வரும் வரை ஒரு நிமிடமேனும் தாமதப்படுத்த முடியாதென கூறப்பட்டுள்ளது.
நேரத்திற்கு வேலை தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக விமானம் பயணித்தமையினால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளது.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 22 மணி நேரம் முன்

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri
