பிரான்ஸிற்கான விமான சேவையை ஆரம்பிக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பிரான்ஸிற்கான நேரடி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.
எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாரிஸிற்கான விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.
இந்த விமான சேவை வாரத்தில் மூன்று நாட்கள் விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளது. இதற்காக எயார் பஸ் A330 – 300 வகை விமானம் ஈடுபடுத்தப்படவுள்ளது.
இந்த விமானங்கள் வாரத்தில் புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்களில் மு.ப 12.35 மணிக்கு கட்டுநாயக்கவிலிருந்து புறப்படவுள்ளன. மறுநாள் காலை 7.30 மணிக்கு பாரிஸை சென்றடையும். மீண்டும் அங்கிருந்து அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளது,
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam