ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெயரில் பாரிய நிதி மோசடி: பல இலட்சம் ரூபாவை இழந்த மக்கள்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி இணையதளங்கள் ஊடாகப் பொதுமக்களிடம் லட்சக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்யப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள கும்பல் குறித்துக் குற்றப்புலனாய்வு திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த பாரிய நிதி மோசடி தொடர்பில் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் விடயங்களைச் சமர்ப்பித்தனர்.
பாரிய நிதி மோசடி
பாதிக்கப்பட்ட இருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, பமுணுகம பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் 55 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடவத்தை பகுதியைச் சேர்ந்த பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் 3.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் இவ்வாறான போலி இணையதளம் மூலம் திருடப்பட்டுள்ளது.
இந்தத் தகவல்களை ஆராய்ந்த கொழும்பு பிரதம நீதவான், இந்தத் திட்டமிட்ட குற்றச்செயல் தொடர்பான விசாரணைகள் தொடர்பிலாக தகவல்களை உடனுக்குடன் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 14 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri