சர்வதேச அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு தடை விதிக்கப்படும் அபாயம்
சர்வதேச அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்குத் தடை விதிக்கப்படும் கடுமையான அபாயம் ஏற்பட்டுள்ளதாக சிவில் செயற்பாட்டாளர் தினேஷ் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையொன்றின் அடிப்படையிலேயே இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிவில் விமான சேவைகள் அதிகார சபையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.
விமான போக்குவரத்துகள்
“ICAO அல்லது ICAO, எனப்படும் சிவில் விமான சேவையின் அதாவது Civil Aviation Organization எனப்படும் அமைப்பொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அது ஸ்தாபிக்கப்படுவது உலகத்தில் விமானப் போக்குவரத்துகள் வளர்ச்சியடையும் போது, அதில் உள்ள அதிகார பலத்தை ஓரிடத்திற்கு மையப்படுத்தி, அதன் நிபந்தனைகளுக்கு இணங்க உலகின் அனைத்து விமானங்களையும் கையாளுவதே அதன் எதிர்பார்ப்பாகும்.
எனவே, நாமும் அதில் ஓர் உறுப்பு நாடாக இருக்கின்றோம். நாமும் அதன் சட்டதிட்டங்களுக்கு இணங்க செயற்பட வேண்டும். இந்த தணிக்கை உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்றது.
ஒவ்வொரு நாட்டிலும் இது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படுகின்றது. ஒவ்வொரு நாட்டிலும் இது போன்ற அந்தந்த நாட்டின் சிவில் விமான சேவை குறித்த பிரமாணங்களுடன் இருக்கின்றதா, அது சட்டப்பூர்வமாக பேணப்படுகின்றதா என்பது குறித்து ஒவ்வொரு நாட்டிலும் அவர்கள் பரிசோதனையொன்றை, தணிக்கையொன்றை நடத்துகிறார்கள்.
ஸ்ரீலங்கன் விமான சேவை
அடுத்த ஆண்டிற்கான தணிக்கையின் முதற்கட்டப் பணிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் ஸ்ரீலங்கன் விமான சேவையும் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. அதில் சில முறைக்கேடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் தணிக்கை சோதனையில் ஸ்ரீலங்கன் விமான சேவை தோல்வியடைந்துள்ளது.
இந்த நிலையிலேயே சர்வதேச அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்குத் தடை விதிக்கப்படும் கடுமையான அபாயம் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO