கடன் மீள்கொடுப்பனவுகளை ஒரு வருடத்திற்கு இடைநிறுத்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முயற்சி
கடனில் சிக்கித் தவிக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், 2024ல் முதிர்ச்சியடையும் 175 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான, சர்வதேசப் பத்திர முதலீடுகளுக்கான கடன்சேவை கொடுப்பனவுகளை 12 மாதங்களுக்கு இடைநிறுத்துமாறு கோரியுள்ளது.
ஆண்டுக்கு 7 சதவீதம் உத்தரவாத விகிதத்தில் இந்த பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
உலகப் பொருளாதார வீழ்ச்சி
கோவிட் தொற்றுநோய், அதன் விளைவாக ஏற்பட்ட உலகப் பொருளாதார வீழ்ச்சி, முன்னாள் கொள்கைத் தவறுகள் மற்றும் உலகளாவிய எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றால் இலங்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.
இந்தநிலையில் தொற்றுநோய்க்குப் பிந்தைய சர்வதேச பயணத்தின் மீட்பு பயணிகள் எண்ணிக்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இலங்கையின் நிலைமை கடினமாக உள்ளது.
அத்துடன் தமது நிறுவனத்தின் வருமானம் மற்றும் செலவுகளில் தொடர்ந்து அழுத்தத்தை
ஏற்படுத்துகிறது என்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.