சமிந்த லக்ஷானின் உடல் றம்புக்கணயில் உள்ள இலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது (Photo)
றம்புக்கணயில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட கே.டி.சமிந்த லக்ஷானின் உடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
றம்புக்கணயில் மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை கலைக்கும் போது கே.டி.சமிந்த லக்ஷான் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
இந்த நிலையில் அவரின் இறுதிக் கிரியைகள் ஆயுதப்படையினரின் பாதுகாப்புடன் இன்று மாலை நடைபெறவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இறுதிச் சடங்குகள் தெவலேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரம்பெத்த ஹிரிவடுன்ன மயானத்தில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையிலேயே அவரது உடல் அஞ்சலிக்காக றம்புக்கணயில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை றம்புக்கண பகுதியில் சடலம் அடக்கம் செய்யப்படும் வரை அமைதியை நிலைநாட்டுவதற்கு படையினரை ஈடுபடுத்துமாறு பொலிஸ் மா அதிபரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri