முப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ள சாமிந்த லக்ஷானின் உடல்
றம்புக்கனை போராட்டத்தை கலைக்கும் போது பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட கே.டி.சமிந்த லக்ஷானின் இறுதிக் கிரியைகள் ஆயுதப்படையினரின் பாதுகாப்புடன் நாளை (22) மாலை நடைபெறவுள்ளது.
இறுதிச் சடங்குகள் தெவலேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரம்பெத்த ஹிரிவடுன்ன மயானத்தில் இடம்பெறவுள்ளது.
றம்புக்கனை பகுதியில் சடலம் அடக்கம் செய்யப்படும் வரை அமைதியை நிலைநாட்டுவதற்கு படையினரை ஈடுபடுத்துமாறு பொலிஸ் மா அதிபரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று (21) முதல் நாளை (23) வரை விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக கேகாலை மற்றும் றம்புக்கனை பொலிஸ் பிரிவுகளின் பாதுகாப்பிற்காக முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
தொடர்புடைய செய்தி...
றம்புக்கனை சம்பவம்: சாமிந்த எவ்வாறு கொலை செய்யப்பட்டார்! நேரடி சாட்சியம் வெளியானது