இலங்கையில் நிலவும் அதிக வெப்பமான காலநிலை! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் இந்த நாட்களில் நிலவும் அதிக வெப்பமான காலநிலை மே மாத இறுதி வரை தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி ஷிரோமணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் பருவக்காற்று இலங்கையில் நன்கு நிலைபெற்ற பின்னர், அதியுச்சமான நிலை படிப்படியாக குறையும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் கூறியுள்ளார்.
உடல் வெப்பம்
மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மூன்று மாதங்கள் பொதுவாக வெப்பமான மூன்று மாதங்கள் என்றும், இலங்கை பருவமழைக்கு இடைப்பட்ட காலத்தில் இருப்பதால், உடல் வெப்பநிலை சுற்றுப்புற வெப்பநிலையை விட அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக, காற்றின் வேகம் குறைவதால், உடலில் இருந்து வெளியேறும் நீராவி சூழலில் சிக்கி, உடலின் வெப்பம் அதிகரித்துள்ளது.
இந்த நாட்களில் உடல் வெப்பம் பொதுவாக 33 முதல் 36 டிகிரி வரை இருக்கும் எனவும் , அதனை விட அதிக வெப்பநிலையை உணர நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
