இலங்கையின் கிழக்கு கரையை வந்தடையவுள்ள காற்றழுத்தம்! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காலை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் வாய்ப்பு அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது நாளை, ஜனவரி 28 ஆம் திகதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையுமெனவும், அதன் பின்னர், அது படிப்படியாக மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து எதிர்வரும் முதலாம் திகதி இலங்கையின் கிழக்குக் கரையை அடையக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது காற்றின் வேகம் மணிக்கு 40-45 கி.மீ ஆக இருக்கும் என்று எதிர்வுகூரப்பட்டுள்ளது.
அத்துடன், கடற்பரப்புகளுக்கு மேல் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், கடலும் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam