மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கலாம்; வளிமண்டலத் திணைக்களம் எதிர்வுகூறல்
நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு, வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், நாட்டின் சில இடங்களில் சுமார் 75 மில்லி மீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளதுடன், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் மழை பெய்யும் எனவும் அறிவித்துள்ளது.
இதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளில், மாலை வேளையில் அல்லது இரவில் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இடி மின்னல் தாக்கம் குறித்து மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை.. பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட் Cineulagam