இலங்கையில் தொடரும் விபத்துக்கள்: சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதில் புதிய தீர்மானம்
சாரதி பயிற்சி நிலையங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான வழிமுறைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உதவி ஆணையாளர் சுஜித் தென்னகோன் தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பாக இலங்கை மருத்துவ சங்க கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஆணையாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடமிருந்து சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு முன்னர் முன் பயிற்சி மற்றும் எழுத்துப் பரீட்சையின் அவசியம் குறித்தும் சாரதி பயிற்சி நிலையங்கள் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
வீதி விபத்துகள்
மேலும், இந்த செய்தியாளர் மாநாட்டில் பேசிய இலங்கை மருத்துவ சங்கத்தின் வீதி விபத்து தடுப்பு குழுவின் தலைவர் டிலந்த மாலகமுவ, கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நெடுஞ்சாலைகளில் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் ஜனவரி மாதத்தில் மாத்திரம் வீதி விபத்துகளினால் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் அங்கு வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் வாகன விபத்துக்களை தடுப்பதற்கு முறையான வேலைத்திட்டம் தேவை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



