இலங்கையில் 700,000 வாகனங்களை திரும்பப்பெற நடவடிக்கை! விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
இலங்கையில் உள்ள வாகன பாவனையாளர்களுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் முக்கிய அறிவுறுத்தலொன்றினை விடுத்துள்ளது.
அதற்கமைய, இலங்கையில் 700,000 இற்கும் அதிகமான மோட்டார் வாகனங்கள் குறைபாடுள்ள காற்றுப்பைகள் மற்றும் ஏனைய பாதுகாப்பு குறைபாடுகளுடன் இருப்பதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிசாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையின் வீதிகளில் பழுதடைந்த காற்றுப் பைகள் கொண்ட எஸ்யுவி உட்பட பல நவீன மகிழுந்துகள், எவ்வித பரிசோதனையும் இன்றி பயணிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாகனங்களை திரும்ப பெற நடவடிக்கை
இதன் காரணமாக வாகன இறக்குமதி முகவர்கள், பாதுகாப்பு குறைபாடுகளுடன் அடையாளம் காணப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் தொடர்பான விபரங்களை திணைக்களத்திடம் இருந்து சேகரித்து, அந்த வாகனங்களை திரும்பப் பெற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பழுதடைந்த காற்றுப்பைகளை கொண்டுள்ள வாகனங்களை செலுத்துவது ஆபத்தான நிலைமையை ஏற்படுத்தும் என்பதினால் பாதுகாப்பற்ற வாகனங்கள் தொடர்பிலான தகவல்கள் தொகுக்கப்பட்டு ஊடகங்கள் ஊடாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவுள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
