8 மேலதிக வாக்குகளால் தோல்விடைந்த வவுனியா வடக்கு பிரதேச சபை பாதீடு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையிலிருந்த வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான பாதீடு 8 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான பாதீடு தவிசாளர் சு.தணிகாலசத்தால் சபையில் இன்று முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து பாதீடு தொடர்பில் உறுப்பினர்களின் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று பாதீடு சபையின் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இதன்போது 26 உறுப்பினர்களைக் கொண்ட வவுனியா வடக்கு பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 7 உறுப்பினர்கள் மாத்திரம் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
பொதுஜன பெரமுன கட்சியின் 4 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்களும், சிறிலங்கா சுததந்திரக் கட்சியின் 2 உறுப்பினர்களும், ஈபிஆர்எல்எப் கட்சியின் 3 உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்களும், சுயேட்சை ஒரு உறுப்பினரும் என 15 பேர் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தனர்.
இதனால் 8 மேலதிக வாக்குகளால் பாதீடு தோல்வியடைந்தது.
வாக்கெடுப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினர் நடுநிலமை
வகித்ததுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி, பொதுஜன பெரமுன ஆகிய
கட்சிகளைச் சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினர்கள் வீதம் மூவர் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.