வவுனியாவில் போசாக்கு மட்ட குறைவுடன் இனங்காணப்பட்ட சிறுவர்கள்
வவுனியா, கண்ணன் கோட்டம் மற்றும் கருப்பனிச்சங்குளம் கிராமத்தில் 82 சிறுவர்கள் போசாக்கு மட்ட குறைவுடன் இனங்காணப்பட்டுள்ள நிலையில், 3 மாதத்திற்குள் அவர்களின் போசாக்கினை அதிகரிக்க துரித நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட சுகாதார திணைக்களமும், ரகமா நிறுவனமும் இணைந்து இச் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளன. வவுனியா மாவட்ட சுகாதாரத் திணைக்களமும், ரகமா நிறுவனமும் (RAHAMA) இணைந்து 'சிறுவர்களுக்கான போசாக்கு மட்டத்தினை அதிகரித்தல்' என்னும் தொனிப்பொருளில் வவுனியா, கண்ணன் கோட்டம் மற்றும் கருப்பனிச்சங்குளம் ஆகிய கிராமங்களில் 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களின் போசாக்கு மட்டம் தொடர்பான ஆய்வு ஒன்றினை முன்னெடுத்திருந்தன.
அதனடிப்படையில் போசக்கு உணவு இன்மை, வறுமை மற்றும் வருமானத்திற்கு மேலதிகமான நாளாந்த குடும்பச் செலவு என்பன காரணமாக பல சிறுவர்கள் சீரான முறையில் போசாக்கு உணவினை பெற முடியாத நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. இவ்வாறு 82 சிறுவர்கள் போசாக்கு குறைவுடன் இனங்காணப்பட்டனர்.
மேற்படி இனங்காணப்பட்ட சிறுவர்களின் ஊட்டச்சத்தின் அளவை 3 மாத காலப்பகுதிக்குள்
அதிகரிக்கச் செய்யும் நோக்கில்,
சுகாதார திணைக்களத்தின் வழிகாட்டலில் ரகமா நிறுவனதால் இனங்காணப்பட்ட
சிறுவர்களுக்கு போசாக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், சுகாதார திணைக்கள
உத்தியோகத்தர்கள், ரகமா நிறுவன உத்தியோகர்த்தர்கள் எனப் பலரும் கலந்து
கொண்டனர்.





உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
