மாங்குளத்தில் நான்கு பேரை கைது செய்த பொலிஸ் விசேட அதிரடிப்படை!
முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி உழவு இயந்திரத்தில் மணல்களை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் நான்கு பேரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்று (18.11.) கைதுசெய்துள்ளார்கள்.
மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரங்களை சோதனைசெய்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அவர்களிடம் அனுமதிப்பத்திரம் இல்லாத நிலையில் குறித்த நால்வரையும் நான்கு உழவியந்திரங்களையும் கைதுசெய்து மாங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
இவர்கள் நால்வரும் கிளிநொச்சி பகுதியினை சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளதுடன் இவர்கள் மீதான சட்டநடவடிக்கையினை மேற்கொள்ளும் நடவடிக்கையில் மாங்குளம் பொலிஸார் ஈடுபட்டுவருகின்றனர்.
எனினும் சட்டமுரணான வகையில் மணலேற்றும் செயலானது நாட்டில் அதிகரித்தவண்ணமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.



