இன்றைய தினத்திற்கான இலங்கையின் வானிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இன்றைய தினத்திற்கான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் குறிப்பாக மாலை நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை இன்று சூரியன், இலங்கையின் கருவலபத்த, மாஹோ, பொல்பித்திகம, நுவரகலா மற்றும் தவபுரம் ஆகிய இடங்களில் பகல் 12.10 அளவில் நேரடி உச்சம் கொடுக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan