சம்பந்தன் - சுமந்திரன் - ரணில் இறுதி முடிவு: விக்னேஸ்வரன் உட்பட பலருக்கு ஏமாற்றம் (VIDEO)
கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையானது விக்னேஸ்வரன் உட்பட பலருக்கு ஏமாற்றத்தினையே ஏற்படுத்தியுள்ளதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அருஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், மனோ கணேசன் ஆகியோரை அவசர சந்தித்திருந்தார்.
இந்த சந்திப்பானது இலங்கை அரசினையும், ரணில் விக்ரமசிங்கவையும் காப்பாற்றும் முயற்சியாகவே இடம்பெற்றதாக கருதப்படுகின்றது.
அதாவது,எரிக் சொல்ஹெய்ம்மின் இந்த சந்திப்பின் பின்னர் திட்டமிட்டு அவசரமாக ரணில் விக்ரமசிங்க சம்பந்தன் மற்றும் சுமந்திரனை மாத்திரம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இவற்றில் முற்றுமுழுதாக அரசியல் ராஜதந்திரமே அடங்கியுள்ளது. சம்பந்தன், சுமந்திரன், ரணில் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையானது அவசர அவசரமாக ஒரு தீர்வினை திணிக்கும் செயலாகவே கருதப்படுவதுடன்,இதற்கு எரிக் சொல்ஹெய்ம்மின் பங்களிப்பு முக்கியமாகவே அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 5 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
