போதையில் வெளிநாட்டுத் தம்பதியினரை ஏற்றிச் சென்ற சாரதி: பொலிஸாரின் நெகிழ்ச்சி செயல்
திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 92ஆம் கட்டைப் பகுதியில், வெளிநாட்டுத் தம்பதியினரை ஏற்றிச் சென்ற கார் சாரதி நேற்று(22) மாலை போதையில் இருந்ததால் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதியினர் திருகோணமலையிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, கந்தளாய் பொலிஸார் வாகனத்தை சோதனை செய்தனர்.
அப்போது, சாரதி மது அருந்தியிருந்தது தெரியவந்தள்ளது. மேலும் சாரதியிடம் வாகன அனுமதிபத்திரம் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
பொலிஸாரின் நெகிழ்ச்சி செயல்
இதனைத் தொடர்ந்து, பொலிஸார் உடனடியாக அவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர், திருகோணமலை, கும்புறுப்பிட்டியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலும், கந்தளாய் பொலிஸார், வெளிநாட்டுத் தம்பதியினரை பாதுகாப்பாக அனுப்புவதற்காக சாரதி ஒருவரை ஏற்பாடு செய்து, அவர்களை விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சாரதி நாளை கந்தளாய் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



