நாட்டில் பல்வேறு தொழிற்சங்க போராட்டங்கள்
நாட்டில் பல்வேறு வேலை நிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க நிறைவேற்று அதிகாரிகள் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளனர்.
இன்றும் நாளையும் சுகயீன விடுமுறை என்ற அடிப்படையில் இந்த இரண்டு நாள் தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
கொழும்பில் எதிர்ப்பு போராட்டம்
இதேவேளை கொழும்பில் இன்றைய தினம் எதிர்ப்பு போராட்டமொன்றும் நடைபெறவுள்ளதாக சங்கத்தின் தலைவர் கே.எல்.உதயசிறி தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்றைய தினம் நண்பகல் முதல் தொடர் வேலை நிறுத்தப் தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளனர்.
கோரிக்கைகள் குறித்து பல்வேறு தடவைகள் அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என கல்விசாரா ஊழியர் சங்கத்தின் ஊடகச் செயலாளர் சமன் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
