இலங்கை மக்களை அச்சுறுத்தும் துப்பாக்கிச் சூட்டு கலாசாரம்! வெளியான முக்கிய தரவுகள்
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 25 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 25 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பலர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதில் 16 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டவை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
இந்நிலையில் நேற்றைய தினம் மாத்திரம் இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றன.
மிதிகம, பத்தேகம பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று (17) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
இதனை தொடர்ந்து நேற்றிரவு கொழும்பு, கிரான்பாஸ் நாகலங் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கமைய இலங்கையில் துப்பாக்கிச்சூட்டு கலாசாரம் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.