கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போதே உயிரிழந்த அவுஸ்திரேலிய வீரர்: வெளியான காரணம்
பாகிஸ்தான்(Pakistan) வம்சாவளியைச் சேர்ந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜுனைத் ஜாபர் கான் விளையாடிக்கொண்டிருக்கும் போது மைதானத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
சர்வதேச அளவில் விளையாடாத 40 வயதான ஜுனைத் ஜாபர் கான் உள்ளூர் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வந்துள்ளார்.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள கான்கார்டியா கல்லூரி ஓவல் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்துள்ளார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்
அப்போது வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் திடீரென மைதானத்திலேயே ஜூனைத் மயங்கி விழுந்துள்ளார். உடனே மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி வழங்கினர். ஆனால் அது பலனளிக்கவில்லை. அவர் மைதானத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த போட்டிக்கு முன்னதாக அவர் ரம்ஸான் பண்டிகைக்காக நோன்பு இருந்து வந்துள்ளார்.
சம்பவம் நடந்த நேரத்தில் வானிலை ஆய்வு மையம் 40°C க்கும் அதிகமான வெப்பநிலையைப் பதிவு செய்துள்ளது.
அடிலெய்டு டர்ஃப் கிரிக்கெட் சங்கத்தின் துணை விதிகள், வெப்பநிலை 42°C ஐத் தாண்டினால் விளையாட்டுகளை இரத்து செய்ய வேண்டும் என்று கூறுகின்றன, இருப்பினும் 40°C வரையிலான வெப்பத்தில் மாற்றியமைக்கப்பட்ட சூழ்நிலையில் போட்டிகள் தொடரலாம்.
ஓல்ட் கான்கார்டியன்ஸ் கிரிக்கெட் கிளப் கானின் மறைவை உறுதிப்படுத்தும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கடுமையான வெப்ப அலை
"ஓல்ட் கான்கார்டியன்ஸ் கிரிக்கெட் கிளப்பின் மதிப்புமிக்க உறுப்பினரின் மறைவால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம்," என்று கிளப் தெரிவித்துள்ளது.
துணை மருத்துவர்களின் சிறந்த முயற்சிகளுக்குப் பிறகும், அவர் துரதிர்ஷ்டவசமாக உயிர் பிழைக்கவில்லை.
இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் எண்ணங்களும் மனமார்ந்த இரங்கல்களும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தெற்கு அவுஸ்திரேலிய மற்றும் நாட்டின் பிற பகுதிகளைப் பாதிக்கும் கடுமையான வெப்ப அலைக்கு மத்தியில் இந்த சம்பவம் நடந்துள்ளது சிட்னி மற்றும் விக்டோரியாவில் வெப்பநிலை 40°C ஐ நெருங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |