யாழில் வீழ்ச்சியடையும் மக்கள் தொகை : வெளியான காரணம்
இலங்கையில் நடாத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பு தொடரில், 15வது கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த மக்கள் தொகை 21,763,170 என மதிப்பிடப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டின் சனத்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பில் பதிவான மொத்த மக்கள் தொகையை விட, இந்த முறை மக்கள் தொகை 1,403,731 அதிகமாக பதிவாகியுள்ளது.
எனினும், யாழ்ப்பாணத்தில் மக்கள் தொகை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. 2012ஆம் ஆண்டில் அதாவது 98.9வீதமிருந்த இலங்கை தமிழர்கள் 2024ஆம் ஆண்டில் 98.6வீதமாக குறைந்திருக்கின்றது.
ஆனால், யாழில் உள்ள சிங்களவர்களை எடுத்துக் கொண்டால் யாழ்ப்பாணத்தில் 2012ஆம் ஆண்டில் 0.4வீதமாக இருந்த சிங்கள மக்கள்தொகை 2024ஆம் ஆண்டில் 0.6வீதமாக அதிகரித்துள்ளது.
அதேவேளை குறிப்பாக கொழும்பில் இலங்கைத் தமிழர்கள் 0.2வீதமாக அதிகரித்துள்ளனர். இந்நிலையில் இந்த சனத்தொகை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இடப்பெயர்வு மாற்றங்கள்தான் என சிரேஷ்ட ஊடகவியலாளர் கஜமுகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் லங்காசிறியின் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு மேலும் கருத்து தெரிவிக்கையில்....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |